Saturday, September 1, 2018

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியாலே நிரப்பும் - 2
உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன் - 2
                       - ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

1.                   1)  உம் அன்பை ருசித்து உம்மோடு இணைந்து
   உறவாடித் துதிக்கணுமே - 2
   கண்ணீரோடு உந்தனை அணைத்து
   துதித்து மகிழணுமே - 2                                                                     
                       - உம்மை உயர்த்தி

2.                   2)  உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
   உம் அன்பால் நிறையணுமே  - 2
   உம் பாதத்தில் விழுந்து பணிந்து
   உந்தனை உயர்த்தணுமே - 2                                                                                            - உம்மை உயர்த்தி

3.                   3)  உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
   உலகத்தை மறக்கணுமே  - 2
   பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
   தழுவி அணைத்துக் கொள்ளும்
                              - உம்மை உயர்த்தி

No comments:

Post a Comment